பஸ் புழுதியை கிளப்பிக்கொண்டு பிரேக் போட்டதும் ,கண்டக்ட்டர்..என் தோளை தட்டி."சார்..நீங்க இங்கத்தான் எறங்கணும்.." என்றதும் லேசாக கண்களை மூடியாவறே இருந்த நான் எனது சூட்கேசை எடுத்துக்கொண்டு எறங்கினேன் . "பாத்து ஏறங்குங்க " என்று சொல்லியவாறே எனது கைப்பையை கொடுத்தார்.அவருக்கு நன்றி சொல்லிவிட்டு பஸ் ஸ்டாப்பை விட்டு இறங்கியதும், எதிர்பட்ட கடையில் போய் ஒரு கூல் டிரிங்க்ஸ் வாங்கி சுவைத்தவாறே
"என்னங்க.இங்க.பத்மா டீச்சர் வீட்டுக்கு போகணும் ..எப்படி போகணுமுன்னு தெரியுமா?" என்று கேட்டதும்.கடைக்காரர்.நீங்க சொந்தமா என்று விசாரித்து தனது கடைப்பையனை கூப்பிட்டு "டேய்..நம்ம ஸ்கூல் டீச்சரை தேடி வந்துக்காங்க..அவங்க வீட்டை காட்டிட்டு வா" என்றதும், அந்த பொடிப்பையனை தொடர்ந்து சென்றேன்.சுமார் 10 நிமிடங்கள் நடந்த பிறகு..” அண்ணா அதோ அந்த பெரிய வீடு தான் டீச்சர் வீடு என்று பாதி வழியிலே கழன்று கொண்டான்..ஒரு வேளை பயம் போலும்.